அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை!

0
141

அதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் தற்போது நடித்து முடித்து விரைவில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘பீஸ்ட்’. கதாநாயகியாக பூஜா ஹெக்டே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 14-ந் தேதி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடி இசை அமைத்திருந்த அரபிக் குத்து பாடல் வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நடனமாடி அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலின் ப்ரோமோ வெளியானது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 19-ந் தேதி ‘பீஸ்ட்’ படத்தின் இரண்டாவது பாடலாக அனிருத் இசையில் விஜய் பாடி இருந்த ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்து படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்ததையடுத்து வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இதனிடையே பீஸ்ட் படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை ரூபாய் 38 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஜய்யின் முந்தைய படங்களை காட்டிலும் ‘பீஸ்ட்’ படம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ படத்தின் வெளிநாட்டு திரையரங்கு விநியோக உரிமை விற்கப்பட்ட நிலையில், தெலுங்கு திரையரங்க விநியோக உரிமையும் விற்று தீர்ந்துள்ளது. இதில் தெலுங்கு திரையரங்க விநியோக உரிமை ரூபாய் 11 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.