Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் நடித்த வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ வெளியீடு! 

விஜய் நடித்த வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ வெளியீடு! 

வாரிசு படத்தின் தீ தளபதி பாடல் வீடியோ youtubeல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த படம் தான் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சுதா, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பெரும் கொண்டாட்டங்களுக்கு இடையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் இந்த படம் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகி கலக்கி வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசூடு’ கடந்த 14ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விஜய் படத்தில் எப்போதும் பாடல்களுக்கு தனி மவுசு இருக்கும். அதேபோல் தான் வாரிசு படத்தின் பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்னரே வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் பாடிய ரஞ்சிதமே பாடல் கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்பிய பாடலாக அமைந்துள்ளது.

அடுத்து நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி பாடல் வரிகள் ஏற்கனவே 5.8 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்தப் பாடலின் வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது.

Exit mobile version