ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்!

0
210
Theft case against O Panneerselvam? Action of CV Shanmugam!

ஓ பன்னீர்செல்வம் மீது திருட்டு வழக்கு! சி.வி சண்முகத்தின் அதிரடி செயல்!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பேச்சு தொடங்கியது முதல் ஓபிஎஸ் இபிஎஸ் என்று தனித்தனி அணிகளாக பிரிந்தது. பெரும்பான்மையாக எடப்பாடி பழனிச்சாமிகே ஆதரவு அளித்தனர். மேலும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிச்சாமியை தேர்வு செய்தனர். மேலும் அக்கூட்டத்தில் கட்சிக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறி ஓ பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கும் எடப்பாடி தரப்பிற்கும் இடையே கலவரம் தொடங்கியது.

அதன் விளைவாக அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கினர். அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்தனர். இந்த கலவரத்தால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்த சீலை அகற்றும் படி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமோ அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி யிடம் ஒப்படைக்குமாறு கூறி உத்தரவிட்டது. பத்து நாட்கள் கழித்து அதிமுக அலுவலகம் ஆனது திறக்கப்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்ததால் அங்குள்ள பொருட்கள் அனைத்தும் அதிக அளவு சேதமடைந்தது. மேலும் பல ஆவணங்கள் கிழிந்தும் காணப்படுகிறது. இதனால் சீவி சண்முகம் அவர்கள் ஓ பன்னீர்செல்வம் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை சூறையாடியதில் முக்கிய ஆவணங்கள் விலையுந்த பொருட்கள் பல வகை காணாமல் போகியுள்ளது. இதனை அனைத்தையும் ஓ பன்னீர்செல்வம் தான் திருடி சென்று விட்டார். திருடி சென்று ஆவணங்களை மீட்டு தர வேண்டும் என இவ்வாறு அவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.