Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டுவிட்டரில் பலரின் அந்தரங்க தகவல் திருட்டு! அதிர்ச்சியில் உறைந்த பயனர்கள்! 

Theft of private information of many people on Twitter! Shocked users!

Theft of private information of many people on Twitter! Shocked users!

டுவிட்டரில் பலரின் அந்தரங்க தகவல் திருட்டு! அதிர்ச்சியில் உறைந்த பயனர்கள்!

உலகம் முழுவதும் அதிகாமான மக்கள்  டுவிட்டர் பயன்படுத்தி வருகின்றனர்.டுவிட்டர் நிறுவனத்தை அண்மையில் தான் எலான் மஸ்க் என்பவர் கைப்பற்றினார்.அவர் டுவிட்டர் நிறுவனத்தி வாங்கியதில் இருந்த பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார்.அதுமட்டுமின்றி புகழ்பெற்றவர்கள், தொழிலதிபர்கள் ,அரசியல்வாதிகள் அனைவரும் அவர்களின் டுவிட்டர் பக்கத்தை அதிகாரபூர்வ கணக்காக அறிவிக்க வேண்டும் என்பதற்கு ப்ளூ டிக் கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றது.

அதனால் டுவிட்டரின் ப்ளூ டிக் கணக்குகளுக்கான கட்டணம் உயர்ந்தது.அதன்  மூலம் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் கணக்கை பெறலாம் என்ற நிலை உருவானது.அதன் பிறகு போலி தகவல்கள் அதிகமாகி வந்தது.அதனால் ப்ளூ டிக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.அதனை தொடர்ந்து ப்ளூ டிக் கணக்குகளுக்கு ஒவ்வொரு துறைக்கும் தனிதனி கலர் செக் மார்க் வழங்க முடிவு செய்யப்பட்டது.அந்த கலர்களை டுவிட்டர் குழுவினர் பிரித்து தரப்படும் என அறிவித்தார்.

மேலும் டுவிட்டரில் கேரக்டர் வரம்பு அதிகரிக்கப்பட்டது.அதுமட்டுமின்றி டுவிட்டரில் ஹேஷ்டேக் சேவை நிறுத்தப்பட்டது.தற்போது சில ஹேக்கர்கள் டுவிட்டர் கணக்குகளை முடக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இந்நிலையில் 20 கோடி டுவிட்டர் பயனர்களின் விவரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹெட்சன்ராக் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருபது கோடி டுவிட்டர் பயனர்களின் இமெயில் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளது.கடந்த ஆண்டே இந்த திருட்டு நடந்துள்ளது என எண்ணப்படுகின்றது.மேலும் ஹேக்கர்கள் மூலம் பலரது அந்தரங்க தகவல்களும் திருடபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

Exit mobile version