Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு! அவதியில் வாகன ஓட்டிகள்!

இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டாக் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. பாஸ்டாக் இல்லாமல் வாகனங்கள் சுங்கச் சாவடியை கடந்து சென்றால் கட்டணத்தை இருமடங்காக செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி மூலம் கட்டணம் வசூலிப்பது மின்னணு முறையில் மாற்றப்பட்டு பாஸ்டாக் நடைமுறைகள் கடந்த 2016 ஆம் வருடத்தில் அறிமுகம் ஆனது சென்ற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பாஸ்டாக் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் பல காரணங்களால் அவகாசம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி ஆன இன்று முதல் தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து செல்லும் வாகனங்கள் எல்லாம் பாஸ்டாக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற எல்லா சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிப்பதற்கு பதிலாக பாஸ்ட் டேக் முறையை கட்டாயம் ஆக்குகிறோம் என்று மத்திய அரசு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவின்படி பாஸ்டர் முறைக்கு பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் வழியாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.இதன் மூலமாக வாகனங்களை ஓட்டி வருபவர்கள் சுங்கச்சாவடிகளில் வெகு நேரம் காத்திருக்க தேவை கிடையாது, எரிபொருள் செலவும் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும் வாகனங்கள், சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என்று ஒவ்வொருவருக்கும் தனித்தனி பிரிவிலும் பாஸ்டாக் கொடுக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களில் பாஸ்டாக் இல்லை என்றால் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version