Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பைரவருக்கான தேய்பிறை அஷ்டமி விரதம்

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சமயங்களில் அஷ்டமி தினங்கள் வருகின்றன. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் ஒரு வடிவமாக தோன்றியவர் ஸ்ரீ பைரவரின் வழிபாட்டுக்கு உரிய சிறந்த நாளாக இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு நாளும் இறை வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கும் ஆடி மாதத்தில் வியாழக்கிழமையில் தேய்பிறை அஷ்டமி வருவது மிகவும் சிறப்பு பலன்களை பக்தர்களுக்கு தரும் என்று சொல்லப்படுகிறது.

ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு உரிய ஒரு சிறந்த நாளாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி வியாழக்கிழமைகளில் வருவது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது. வியாழக் கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரம் ஆன ஒன்று முப்பது மணியிலிருந்து 3 மணிக்குள்ளாக பைரவர் கோவில் அல்லது சிவன் கோவிலில் இருக்கின்ற சன்னிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பணம் செய்து செவ்வாய்க்கிழமை கைவைத்தியம் செய்து தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் உள்ளிட்டவற்றை தெரிவித்து பைரவரை வணங்க வேண்டும். அதோடு இந்த நேரத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் துதிப்பது மிகவும் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.

மேலே சொல்லப்பட்ட வழிமுறையை பின்பற்றி ஆடிமாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணகஷ்டங்களாக இருந்தாலும் நீங்கிவிடும். தொழில் வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வராமல் காக்கும். பொருட்கள் களவு செல்லாமல் இருக்கும் வருமானம் பெருகும் பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனதளவில் பாதிப்படைந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீகங்கள். செய்வினை மந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்களெல்லாம் சிறிது சிறிதாக குணமாகும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version