இவர்களுக்கு இன்றுடன் ஒப்பந்தம் முடிவடைகின்றது! பணி நீட்டிப்பு கிடையாது!
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் என்பது அதிகளவில் இருந்தது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தபட்டது.போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டது.
மக்கள் வெளியே செல்வதினால் தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது என போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஒபந்த அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளிலும் நர்சுகள் நியமிக்கபட்டத்னர்.
அந்த வகையில் சுமார் 2ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட நர்சுகள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நியமிக்கபட்டனர்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட நர்சுகளின் பனிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது.அவர்களுக்கு எந்த ஒரு பணி நீட்டிப்பும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.இந்த அறிவிப்பிற்கு எம்.ஆர்.பி. செவிலியர் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.