Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

Their PAN card will be valid for next 1 month only! Action order issued by the government!

Their PAN card will be valid for next 1 month only! Action order issued by the government!

இவர்களுடைய பான் கார்டு அடுத்த 1 மாதம் மட்டுமே செல்லும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

மத்திய அரசு முன்னதாகவே நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது. மேலும் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை அவ்வப்போது நீட்டித்து வருகின்றது. மேலும் இதனை இணைக்க வில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும் என அபராதமும் விதிக்கப்பட்டது. அதனையடுத்து பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டுமானால் ரூ 1000 அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடபட்டிருந்தது.

மேலும் இந்த இணைப்பிற்கான காலவகாசம் வரும் மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இது குறித்து மத்திய நேரடி வரிகள் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் விலக்கு அளிக்கபட்டவர்களை தவிர மீதமுள்ள அனைவரும் பான் அட்டையுடன் ஆதாரை வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைத்திருக்க வேண்டும். அவ்வாறு இணைக்கவில்லை என்றால் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அந்த பான் கார்டுகள் செயல் இழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடரந்து பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான விலக்கு என்பது 1961 ஆம் ஆண்டு வருமான வரிச்சட்டத்தின் கீழ் அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா போன்ற மாநிலங்களில் வசிக்கும் தனிநபர்கள்மற்றும்  80 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இந்தியர் அல்லாதோர் என இவ்வாறான குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.

மேலும் பான்கார்டு செயல் இழந்து விட்டால் அவர்களால் வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது. அதுமட்டுமின்றி பணத்தை திரும்ப பெற வேண்டும் என விண்ணப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version