Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!

#image_title

வரப்போகிறது சென்னையில் தீம்பார்க்!!!சென்னை மக்களுக்கு இனி ஜாலிதான்!!!

சென்னை மாநகரின் புறநகர் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் தீம்பார்க் அமைக்கவிருப்பதாக அரசு அறிவித்துள்ளது.இது டிஸ்னி லேண்டு தீமில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

சென்னையின்  புறநகர் பகுதியில் சுமார் 100  ஏக்கர் பரப்பளவில் தனியார் பங்களிப்புடன் வரும் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்படவுள்ளது.அமெரிக்காவின் டிஸ்னி லேண்டு போல விளையாட்டு அரங்குகள்,நீர்ச்சருக்கு விளையாட்டுகள்,ஜியன்ட்டு வீல்கள் போன்றவைகளும் அமைக்கப்படவுள்ளது.இந்த தீம்பார்க் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமையவுள்ளது.

தனியார் தீம்பார்க்குகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் நிலையில் அரசு ஏற்படுத்தவுள்ள  இந்த தீம்பார்க் அனைத்துதர  மக்களும் கண்டுமகிழும் வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Exit mobile version