Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் …..! திக் விஜய் சிங் கிண்டல் ……!

மத்திய பிரதேச மாநிலத்தில் காமத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவிக்கும்போது, இந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கின்ற அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்று கிண்டலாக பேசியிருக்கிறார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகருமான கமல்நாத் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பெண் வேட்பாளர் இமார்டி தேவியை தகாத வார்த்தைகளில் பேசியது அந்த மாநில அரசியலில் ஒரு பெரிய புயலையும் பரபரப்பையும் கிளப்பி இருக்கின்றது. இந்த நிலையில் திரு கமல்நாத் அவர்களை கண்டிக்கும் வகையில் மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சியினர் நேற்றைய தினம் ஒரு மவுன அறப்போராட்டம் நடத்தியுள்ளனர். கமல்நாத் பேசி இருப்பது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

அந்த விவகாரத்தில் கமல்நாத் தெரிவித்த கருத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் ஒரு முயற்சியாக, ஹத்ராஸில் 19 வயது மதிக்கத்தக்க ஒரு தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சம்பவத்தை கையில் எடுத்துக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அவர்கள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கமல்நாத் அவர்கள் எந்த சூழ்நிலையில் அப்படி ஒரு வார்த்தையை பிரயோகித்தார் என எனக்கு தெரியாது எனவும் ,பாஜக இப்போது நடத்தி வரும் இந்த போராட்ட நாடகத்திற்கு பின் இருக்கின்ற தேவை எது என்பதும் எனக்கு தெரியாது என தெரிவித்து இருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஹத்ராஸ் என்று அழைக்கப்படும் அந்த கிராமத்தில் ஒரு தலித் இளம்பெண் பாலியல் வன்கொடுமை மட்டும் செய்யப்படவில்லை அந்த மாநில காவல்துறை அந்த பெண்ணின் உடலை கூட அந்த பெண்ணின் உறவினர்கள் இடம் தகனம் செய்ய கூட தரவில்லை அப்போது எதற்காக பாரதிய ஜனதா கட்சி மௌனம் காத்திருந்தது. சிவராஜ் சிங் சவுகான் மற்றும், சிந்தியா அவர்களும் இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்

Exit mobile version