நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

0
143

தேனியில் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கின்றது.

தேனி மாவட்டத்தில் இருக்கின்ற ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் பேரூராட்சி தலைவராக இருந்தவர் இவருக்கும், ஆண்டிப்பட்டியை சார்ந்த கற்பகவல்லி என்பவருக்கும், திருமணம் நடைபெற்றது. சிறுமியாக இருந்த நேரத்தில் அதாவது 14 வயதிலேயே திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2015ஆம் வருடம் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகி இருக்கின்றார் கற்பகவல்லி.

இந்த நிலையில், சுரேஷ் அடிக்கடி தன்னுடைய மனைவியிடம் சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகின்றது. இது ஊர் முக்கியஸ்தர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் பேசி சமாதானம் செய்து இருக்கிறார்கள். ஆனாலும் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கி இருக்கின்றார் சுரேஷ். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதியன்று சுரேஷ் கற்பகவல்லி கர்ப்பமாக இருக்கிறார் வயிற்றில் குழந்தை இருக்கின்றது என்று கூட பார்க்காமல் எட்டி உதைத்தும், மார்பில் சிகரெட்டால் சூடு வைத்தும் , தாலி கயிற்றால் கழுத்தை நெரித்தும் கொடுமைபடுத்தி இருக்கின்றார் சுரேஷ்.

இதனைத் தொடர்ந்து பலத்த காயமடைந்த கற்பகவல்லி, தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். குழந்தை கலைந்த காரணத்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அப்போது 19 வயதே ஆன கற்பகவல்லி கடுமையாக தாக்கப்பட்டு இருந்தது தெரிய வந்திருக்கின்றது.

இதனை தொடர்ந்து, கற்பகவல்லி உடைய தந்தை நல்லதம்பி சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வந்தது சுரேஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட காரணத்தால் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 302 ,மற்றும் 316 ,ஆகிய பிரிவுகளின் கீழ் சுரேஷ் மீது வழக்கு செய்ய பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ,அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கு போடப்பட்டு அந்த வழக்கு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .இந்த வழக்கில் 20 சாட்சிகளும் 13 ஆதாரங்களும் சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி அப்துல் காதர் இதுபோன்ற குற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்குவதையே வலியுறுத்தி இருக்கின்றது. என்று சுட்டிக்காட்டிய நீதிபதி சுரேஷை 102வது சட்டப் பிரிவின் படி சாகும் வரை தூக்கில் போட வேண்டும், 316 சட்டப் பிரிவின்படி 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை. அதோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் போது கடுமையான வழக்கு இது என்று தெரிவித்தார். நீதிபதி.