Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூடானில் உள்ள 80 தமிழர்களும் விரைவில் மத்திய அரசுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோம் – வெளிநாட்டுத் தமிழர்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!!

#image_title

சூடான் நாட்டில் இதுவரை 80 தமிழர்கள் உள்ளனர் என்ற தகவல் பெறப்பட்டுள்ளது, அவர்களை அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மீட்பது குறித்து மத்திய அரசோடு சேர்ந்து விரைவில் பணியாற்றுவோம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், சூடான் உள்நாட்டு போரில் தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. அது தொடர்பான பட்டியலை தயாரித்து வருகிறோம். உக்ரைன் – ரஷ்யா போரில் மீட்டது தமிழர்களை மீட்போம் என்றார்.

நேற்றிரவு 10 மணி வரை 80 தமிழர்கள் பெயர் விவரங்கள் பெறப்பட்டுள்ளது, அவர்களை அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, மீட்பது குறித்து மத்திய அரசோடு சேர்ந்து விரைவில் பணியாற்றுவோம் எனவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version