இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது அதன் வேகம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இதற்கு காரணம் பொதுமக்களின் அலட்சியம் தான் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்திப்குலெரியா தெரிவித்து இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரையில், ஒருநாள் தொடரின் பாதிப்பு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து தொட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த தொடரின் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. உடனடியாக மக்கள் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி செயல்படத் தொடங்கினார்கள். இதனால் இந்த நோய்த்தொற்று செயலிழந்து போய் விட்டதாக விதி முறைகளை பின்பற்றுவதற்கு பொதுமக்கள் தவறிவிட்டனர் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நோயை பொதுமக்கள் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். வெளியே சென்று பார்த்தால் வணிக வளாகங்கள், உணவகங்கள் சந்தைகள் இன்று அனைத்து இடங்களிலும் ஒரே கூட்டமாக இருக்கிறது. இது போன்ற நிகழ்வு தான் நோயை பெரிய அளவில் பரப்பும் ஒரு காரணமாக இருந்து வருகிறது.
முன்பெல்லாம் ஒரு நபருக்கு தொற்று ஏற்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு இந்த தோற்று பரவிவிடும் ஆனால் தற்சமயம் ஒரு நோயாளி ஏராளமான நபர்களுக்கு இந்த நோயைப் பரப்பி விடுகிறார்கள். இந்த அளவிற்கு இந்த தொற்று விகிதம் வேகமாக பரவி வருகிறது. இதற்கு எளிதாகவும் அதிகமாகவும் பரவக்கூடிய மரபணு உருமாறிய தொற்றுக்கள் தான் காரணம் என்று தெரிவித்து இருக்கிறார்.
அதேபோல உலகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த மனித இனமும் தற்போது ஒரு மிகக் கடினமான சூழ்நிலையில், இருக்கிறது.முக்கியமாக வேலை எதுவும் இல்லாமல் வெளியே சென்றுவிட வேண்டாம் அதேபோல எந்த ஒரு இடத்திலும் கூட்டம் சேரக்கூடாது அரசு விதித்திருக்கின்ற விதி முறைகளை மிக கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அலட்சியமாக செயல்பட்டால் இதுவரையில் கிடைக்கப் பெற்ற பலன்கள் எல்லாவற்றையும் நாம் இழக்க நேரிடும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு நிலைமை கைமீறி சென்றுவிடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த சூழ்நிலையை நாம் சரி செய்யாமல் விட்டுவிட்டால் இந்த தொடரின் பரவல் விகிதம் நாட்டுடைய சுகாதார வசதிகள் மீது மிகப்பெரிய கரையை ஏற்படுத்தி விடும் பொதுமக்கள் இதற்கான தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். அந்த தடுப்பு ஊசி இந்த நோய்த்தொற்று வருவதை தடுக்காது ஆனாலும் இந்த நோய்த்தொற்று வந்தால் நோய் தீவிரம் அடைவதை தடுக்கிறது அதோடு இறப்பு விகிதத்தையும் குறைகின்றது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.