NTK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் சமீப காலமாக பணிப்போர் முற்றி வருகிறது. இதன் வெளிப்பாடாக பலரும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சீமான் மட்டும் தான் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு இருக்கையில் மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அவர்களுக்கும் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இதன் வெளிப்பாடாக சீமான் அவரை பிசிறு என்று கூறிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்ததிலிருந்து காளியம்மாளின் கட்சி ரீதியான அனைத்து செயற்பாடுகளிலும் அவரது உத்வேகமானது குறைந்து கொண்டே வந்தது. தற்சமயம் அரசியல் உறவுகளின் சங்கம் என்ற நிகழ்ச்சியானது அடுத்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இதில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் குறிப்பாக காளியம்மாள் பெயரானது இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் நாம் தமிழர் கட்சியில் எந்த பொறுப்பில் உள்ளார் என்பதை குறிப்பிடாமல் “சமூக செயற்பாட்டாளர்” என்று தனித்துவமாக தெரிவித்துள்ளனர். அதே சமயம் மற்ற அரசியல் கட்சி தலைவர்களின் பெயர் மற்றும் பொறுப்பு உள்ளிட்டவையை குறிப்பிட்டுள்ளனர்.ஆனால் இவரது பெயருக்கு பின்னால் மட்டும் நாம் தமிழர் கட்சியிலிருக்கும் பொறுப்பு சம்பந்தமாகவும் எதையும் குறிப்பிடவில்லை.
இது ரீதியாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது கட்சியிலிருந்து விலகுவது குறித்து நானே அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். அதே சமயம் இவர் அதிமுக தவெக திமுக என எந்த கட்சியுடன் இணையப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்சமயம் திமுக நிர்வாகிகளுடன் ஒரே மேடையில் சந்திக்க உள்ளதால் இனி வரும் நாட்களில் இவர் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்பட அதிக வாய்ப்புள்ளதாகவும், அந்தவகையில் அக் கட்சியில் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.