Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆட்டு மூளை சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்கும்!! இவர்கள் கட்டாயம் சாப்பிடணும்!!

MUTTON BRAIN BENEFITS: மாமிசப் பிரியர்கள் ஆட்டிறைச்சியை விரும்பி சாப்பிடுகின்றனர்.பிராய்லர் கோழியை விட ஆட்டிறைச்சி அதிக நன்மைகள் கொண்டிருப்பதால் மாதம் இருமுறை சரியான அளவில் ஆட்டிறைச்சி சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டிறைச்சி நன்மைகள் நிறைந்தவை என்றாலும் உயர் இரத்த அழுத்தம்,சர்க்கரை நோய் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.முடியாதவர்கள் இதை குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம்.ஆட்டிறைச்சியை விட மற்ற பாகங்கள் அதிக நன்மைகளை கொண்டுள்ளது.ஆட்டுக்கால்,ஆட்டு இரத்தம்,குடல்,கல்லீரல்,ஆட்டு மூளை,ஆட்டுத்தலை போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த ஆட்டு பாகங்களில் இருந்து கிடைக்கும்.

இதில் ஆட்டு மூளை உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை கொடுக்கிறது.ஆட்டு மூளையை வறுத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் நிச்சயம் ஆச்சர்யப்படுவீங்க.

ஆட்டு மூளையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

1)இரும்புச்சத்து
2)புரோட்டின்
3)ஒமேகா 3 கொழுப்பு அமிலம்
4)வைட்டமின் பி12

ஆட்டு மூளையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் என்றாலும் இதில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.உடல் பருமன்.கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி ஆட்டு மூளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆட்டு மூளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

1.நம் மூளையின் ஆரோக்கியம் மேம்படும்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

2.ஆட்டு மூளையில் இருக்கின்ற புரதச்சத்து உடலுக்கு வலிமையை கொடுக்கிறது.ஆட்டு மூளையில் உள்ள வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

3.இரத்த சோகை,உடல் சோர்வு பிரச்சனை இருப்பவர்கள் ஆட்டு மூளையை உட்கொண்டால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

5.இதில் இருக்கின்ற இரும்புச்சத்து உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

6.பாலியல் ஆரோக்கியம் மேம்பட ஆட்டுமூளையை உட்கொள்ளலாம்.ஆண்கள் ஆட்டுமூளையை சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

7.ஆட்டு மூளையில் இருக்கின்ற ஜிங்க் சத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Exit mobile version