Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!

#image_title

பில்லி சூனியம் ஏவல் தொல்லைக்கு இதை விட சிறந்த பரிகாரம் இருக்க முடியாது!!

இன்று மனிதர்கள் பொறாமை குணம் கொண்டவர்களாக மாறி வருகின்றனர்.மற்றவர்கள் முன்னேறி விடக் கூடாது என்பதற்காக பல தீய வேலைகளை செய்து வருகின்றனர்.பிறரின் நிம்மதியை கெடுக்க காத்துக் கொண்டிருக்கும் கெட்ட மனிதர்களால் பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி ஆகியவை வைக்கப்படுகிறது.

பிறர் அழிய வேண்டும் என்று இது போன்று கெட்ட விஷயங்களை செய்யும் நபருக்கு அந்த பாவம் எங்கு சென்றாலும் கழியாது.

இந்த தீய மனிதர்களால் ஏற்படக் கூடிய பில்லி,சூனியம்,ஏவல்,கண் திருஷ்டி முழுமையாக ஒழிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செவ்வாய் அல்லது சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டுக் கொள்ளவும்.பிறகு கோலத்திற்கு நடுவில் சிறிது வேப்பிலை வைக்கவும்.

இந்த வேப்பிலையின் நடுவில் ஒரு மண் அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் வெண் கடுகு சிறிதளவு மற்றும் திரி போட்டு தீபம் ஏற்றவும்.

பிறகு தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் கண் திருஷ்டி,பில்லி,சூனியம்,ஏவல் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு மாதம் ஒருமுறை செய்து வந்தால் கெட்ட சக்திகள் அகலும்.

Exit mobile version