chennai:சென்னை அண்ணா சாலையில் அரை நிர்வாணமாக சாலையில் ரகளை செய்த நபரால் பரபரப்பு.
போக்குவரத்து காவலர் ஆனந்தராஜ் சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து பணியை இன்று காலை மேற்கொண்டு வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பேருந்திற்கு வழி விடாமல் மறித்து இருக்கிறார். இதனால் பேருந்து ஓட்டுனரும் அந்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இது கை கலப்பு ஏற்படத் தொடங்கியது.
அதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த நபரை சாலை ஓரமாக அழைத்து வந்து இருக்கிறார் காவலர் ஆனந்தராஜ். அப்போது அந்த நபர் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் பொறுமையை இழந்த காவலர் ஆனந்தராஜ் அந்த நபரின் சட்டையை பிடித்து இழுத்து இருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த அந்த நபர் காவலர் ஆனந்தராஜ் தாக்கி இருக்கிறார். இதை அறிந்த மற்ற காவலர்கள் ஆனந்தராஜ் மீட்டு இருக்கிறார்கள். பின் அந்த நபரை பிடிக்க முற்படும்போது அந்த நபர் சட்டையை கழட்டிவிட்டு சாலை நடுவே படுத்து உருண்டு இருக்கிறார். மேலும் அவரை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.
மேலும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் மயிலாப்பூரை சேர்ந்த சண்முகராஜ் என தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.