கள்ளச்சாரயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் வழங்குவதில் சிக்கல்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய விஷ சாராய சம்பவம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அது தொடர்பான செய்திகள் நாள்தோறும் புது புது வடிவில் வெடித்து கொண்டிருகின்றன.அந்த வகையில் தான் இப்பொழுது நீதிமன்ற வழக்கு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க காரியத்தில் கலந்து கொண்ட ஆண்கள் நிறைய பேர் கள்ளச் சாராயம் குடித்து உள்ளனர்.அதில் ஒரு சில பெண்களும் அடங்குவர்.அவர்கள் குடித்த கள்ளச் சாராயமானது விஷ சாராயமாக மாறி பலரின் உயிர்களை காவு வாங்கியுள்ளது.அதாவது இவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தனால் என்ற வேதிப் பொருள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளது.இது உடலில் இருக்கும் செல்கள் முழுவதும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்த கூடிய அளவிற்கு மிகவும் கொடியது.இதன் காரணமாக தான் தற்பொழுது இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இன்னும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியாக ரூபாய் பத்து லட்சத்தை அறிவித்தது.இதனை எதிர்த்து முகமது கோஸ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அதில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் பத்து லட்சம் வழங்கப்படும் எனக் கூறியுள்ள கருத்தினை அரசு மறுபரிசீலனை செய்து,தனது நிலைப்பாட்டினை நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.மேலும் இழப்பீட்டுத் தொகை பத்து லட்சம் என்பது மிகவும் அதிகம் என்றும்,இவ்வளவு பணத்தை தமிழக அரசால் எப்படி வழங்க முடியும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.