திருச்சூரில் சாலையில் மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு. யானை மீது அமர்ந்திருந்த இரண்டாம் பாகன். ஒரு மணிநேரம் போராடி யானையை அடக்கிய பாதுப்புபடையினர்.
கேரளா மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவிற்காக ஸ்ரீகிருஷ்ணாபுரம் விஜய் என்ற யானை கொண்டுவரப்பட்டது.இந்நிலையில் மன்னுத்தி-வடக்காஞ்சேரி நெடுஞ்சாலையில் முடிக்கோடு என்ற இடத்தில் சாலையில் நடந்து யானையை அழைத்து சென்றனர்.
அப்பொழுது ஒரு பாகன் யானையின் மீது அமர்ந்திருந்தார். நடந்து சென்ற யானை, சாலையோரம் நின்றிருந்த லாரியை யானை திடீரென முட்டியது இதில் யானையின் தந்தம் லாரில் பட்டு உடைந்தது.
மேலும் லாரியை உடனடியாக எடுத்து சென்றனர். யானை தந்தம் உடைந்ததால் யானை மிரண்டு ஆவேசமாக ஓடியது உடன் அங்கிருந்த வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது .மேலும் சாலையோரம் இருந்த மின்கம்பத்தையும் உடைக்க முற்பட்டது.
பின் யானை பாதுகாப்பு படையினர் வந்து யானை சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அடக்கி யானையை சாந்தப்படுத்தி யானையின் மேல் இருந்த பாகனை பத்திரமாக மீட்டனர்.
பின் யானையை லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். யானையால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.