6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

0
256
#image_title

6 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. குடை முக்கியம் மக்களே..!

தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வீசும் கிழக்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று அதாவது ஜனவரி 05 முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.

அதன்படி இன்றும், நாளையும் கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, கரூர், நாமக்கல், விருதுநகர், ஈரோடு, நாகை. புதுக்கோட்டை, தென்காசி, சிவகங்கை, மயிலாடுதுறை, திருநெல்வேலி, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கின்றது.

மேலும் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது.