மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

0
346
#image_title

மீண்டும் கனமழை இருக்கு.. அலர்ட் செய்த வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய மழையானது தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்து விட்டது. இதனிடையே மிக்ஜாம் புயல் வட தமிழகத்தையும், குமரிக்கடல் அருகே உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென் தமிழகத்தையும் ஆட்டி படைத்து விட்டு சென்றது.

தற்பொழுது பனிக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பெரிதளவு மழை இருக்காது என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இந்த ஆண்டின் இறுதி வாரம் தற்பொழுது தொடங்கி இருக்கும் நிலையில் இன்னும் சில தினங்களில் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு, வங்கக்கடல் பகுதியில் நிலவ இருப்பதால் இந்த கனமழையானது அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி முதல் வாரம் முழுவதும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.