போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!!

0
174
There is no bus route in Theni...Tasmac

போக்குவரத்துக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகள் அகற்றம்!!

டாஸ்மாக் 1983  அப்போதைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால்  நிறுவப்பட்டது. 2001 இல், மதுவிலக்கு மீண்டும் நீக்கப்பட்ட மற்றும் டாஸ்மாக் மதுவின் மொத்த ஏகபோகமாக மாறியது. சில்லறை விற்பனைக்காக மதுக்கடைகள் மற்றும் பார்களை நடத்துவதற்கான உரிமங்கள், அரசு ஏலம் எடுத்தது.

இதனிடையே தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து எர்ணாகுளம், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பார்வசதி இல்லாத கடைகளில், திறந்தவெளியில் மது அருந்தும் “குடிமகன்களால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

தமிழகத்திலே மதுபானம் விற்பனையில் முன்னிலையில் இருப்பது, திருப்பூர் மாவட்டத்தை அடுத்து தேனி சொல்லலாம். பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா உள்ளிட்ட மதுரகங்கள் மாதம் 2 லட்சம் கேஸ் வரை விற்கப்படுகின்றன. பீர் வகைகள் மாதம் 80 ஆயிரம் கேஸ் வரை விற்பனையை எட்டி விடுகிறது.

பார் வசதியுடைய மதுக்கடைகளுக்கு வந்து செல்லும், “குடி” மகன்கள் எண்ணிக்கை எப்போதும் குறைவதே கிடையாது. அரசுக்கு வருவாய் தரும் மதுக்கடைகள் பெரும்பாலும் சாலையோரத்திலேயே இருப்பதால், மக்களுக்கு இடையுறுகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நகர்ப்புற மதுக்கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அதிகரிக்கும்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது.

வார இறுதி நாளான சனிக்கிழமைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. சாலையின் இருபுறமும் டூவீலர்கள் அணிவகுத்து நிற்பதே இதற்கு காரணம். போதை தலைக்கேறும் நபர்கள், தங்களுக்கே உரித்தான பாஷையில் பேசும்போது அவ்வழியே செல்லும் பெண்கள், குழந்தைகள்  பாதிப்படைகின்றனர். ஆகவே பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 2  டாஸ்மாக் கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும் என்று மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். திறந்தவெளியில் மது அருந்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.