பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

0
264
#image_title

பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளர் யாரும் கிடையாது! டிடிவி தினகரன் அவர்கள் பேச்சு!

நாடாளுமன்ற தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் இங்கு பிரதமர் மோடிக்கு நிகரான வேட்பாளரோ அல்லது தலைவரோ யாரும் இல்லை என்று அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. அதையடுத்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின், எடப்பாடி கே பழனிசாமி மற்றும் பல அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில் டிடிவி தினகரன் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பற்றி பேசியுள்ளார். மேலும் அதிமுக கட்சியின் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களை பற்றியும் விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் அவர்கள் “இங்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இணையான வேட்பாளர் யாரும் இல்லை. அதே போல பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நிகரான தலைவரும் யாரும் இல்லை என்று பிரதமர் மோடி அவர்களை டிடிவி தினகரன் அவர்கள் புகழ்ந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் அவர்கள் “எம்ஜிஆர் வழங்கிய அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களிடம் உள்ளது என்று பெருமை கூறும் எடப்பாடி கை பழனிசாமி அவர்கள் ஏன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. நீங்கள் பாருங்கள் அதிமுக கட்சி அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வியை சந்திக்கும்.

திமுக கூட்டணியிலும் சரி, அதிமுக கட்சியின் கூட்டணியிலும் சரி. இரண்டு கூட்டணியிலும் பிரதமர் வேட்பாளர்கள் என்று யாரும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நிகர் அவரே” என்று டிடிவி தினகரன் அவர்கள் கூறியுள்ளார்.