கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்த காலங்களில் தமிழகத்தில் ஓரளவுக்கே கொரோனா நோயாளிகள் இருந்த நிலையில், படிப்படியாக இது அதிகரித்து கொண்டே போனது.
தப்லிக் ஜமாஅத், கோயம்பேடு சந்தை என கொரோனா காரணிகள் அதிகரித்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்தது.
மஹாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதல் இரண்டு இடங்களில் இருந்தது.
தற்போது தடுப்பூசி புழக்கம் அதிகரித்ததால் கொரோனா கட்டுக்குள் உள்ளது எனலாம்.
தமிழகத்தில் தற்போது கொரோனா எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வர வாய்ப்பில்லை எனவும், இருந்தாலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியம் எனவும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்.