இந்த நான்கு பேர் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாம். மரணம் இல்லா வாழ்கை வாழ்பவர்களாம். அவர்கள் யார்? என்பதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
இந்த நிலையில்லா வாழ்க்கையில் எதுவுமே நிரந்திரம் இல்லை. ஆனால் அதற்காக வருந்துபவர்கள் தான் அதிகம். எது நிலையானது? எது நிலையற்றது? என்பதை தெரிந்து கொண்டால் வாழ்க்கைக்குப் பின் உள்ள அர்த்தத்தை புரிந்து கொள்வீர்கள். கடவுளை வணங்கி அவர் கூறும் போதனைகளை ஏற்று அவருடன் பயணம் செய்ய வேண்டும். இங்கே உள்ள பாச பற்றுகள் எல்லாம் நிலையற்றவை என்பதை நீங்கள் உணர வேண்டும்.
அந்த நான்கு பேர் யார்? அவர்கள் மரணம் இல்லாமல் எப்படி இருக்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.
எவன் ஒருவன் உலகப் பொருள்களின் மீது ஆசை படாமல் வாழ்கிறானோ! ஐம்பொறிகளையும் அடக்கி சக்தி வாய்ந்தவனாக இருக்கிறானோ! எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்கிறானோ! அளவாக உண்ணுகிறானோ! அவனுக்கு மரணம் நெருங்காது என்று கூறப்படுகிறது.
நீங்கள் கேட்கலாம் மரணமில்லா வாழ்க்கை சாத்தியமா? என்று மரணம் இல்லா வாழ்க்கை சாத்தியமே என்று வள்ளலார் கூறியுள்ளார்.
நம் முன்னோர்கள் எழுதி வைத்த புத்தகங்களையும் நூல்களையும் நாம் விரிவாக படிக்கும் பொழுது நமக்கு ஒன்று புலப்படும். அது என்னவென்றால் இந்த உலகத்திலுள்ள பொருட்கள், ஆசைகள் எல்லாம் நிலையற்றவை தான். மனித உடல் நிலையற்றது தான். ஆன்மா நிலையானது என்று நமக்கு புலப்படும்.
இந்த கேள்வியை நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டு பார்த்தால் எது உண்மை என்பதை நீங்களே அறிவீர்கள்.
எதற்கும் ஆசைப்படாமல் ஆசைக்கு மனதில் இடம் கொடுக்காமல், நாம் யாரென்ற தேடலில் நீங்கள் உங்களை உணரும் பொழுது தான் மரணம் இல்லா வாழ்க்கை சாத்தியம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இதை எப்படி நம்புவது? என்று அனைவரும் யோசிக்கலாம். ஆனால் இதற்கான உண்மை சான்றுகள் நம் சித்தர்கள். சித்தர்களின் உடல் அழிந்து இருக்கலாம். ஆனால் ஆன்மாவிற்கு அழிவு கிடையாது.
இது நமக்கு சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். மேலே கூறப்பட்டுள்ள நான்கு முறைகளும் பின்பற்ற வேண்டும். இதை கேட்பதற்கும் பார்ப்பதற்கும் மிக சுலபமாக இருக்கலாம். ஆனால் அதை செய்வது என்பது மிகவும் கடினமானது. அந்த வார்த்தையில் எண்ணற்ற பொருள்கள் அமைந்திருக்கின்றன.
அதனால் இந்த நான்கு முறைகளை எவனொருவன் பின்பற்றி வருகிறானோ அவன் மரணமில்லா பெருவாழ்வு தகுதி ஆகிறான்.