Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது!

#image_title

பத்திர பதிவு முறைகேடிற்கு இனி வாய்ப்பில்லை!தமிழக அரசின் அதிரடி திட்டம் இன்று அமலுக்கு வந்து விட்டது!

பெரும்பாலும் பொதுமக்கள் சிலர் நிலத்தின் மீது கொண்ட அதித வெறியால் பொய்யான ஆவணங்களை பயன்படுத்தி, நிலத்தை பத்திர பதிவு செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இந்த மோசடியில் பல அப்பாவி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த மோசடி கும்பலில் இருந்து அப்பாவி  ஜனங்களைக் காப்பாற்ற தமிழக அரசானது இப்போது ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டம் குறித்து அமைச்சர் கூறியதாவது :

பத்திர பதிவின் போது தேவையான ஆவணங்கள் அனைத்துமே அசல் சான்றிதழ்களாக தான் இருக்க வேண்டும் என்றும்,பதிவு செய்யும் நிலத்தின் புகைப்படம் மற்றும்,அதனுடைய புவியியல் விபரங்களை கொண்டு தான் இனிமேல் பத்திர பதிவானது நடைபெரும் என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை, அனைத்து சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் கட்டயமாக பின்பற்ற வேண்டும் என்றும், இது குறித்த கூடுதல் விபரங்கள் அனைத்தும் பதிவுத்துறை தலைவரை கொண்டு அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பத்திர பதிவில் முறைகேடுகள் வராமல் பாதுகாக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Exit mobile version