இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

0
258
There is no power outage here anymore! The action order issued by the power board!

இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் நுகர்வோர் அவரவர்களின்   மின் அட்டை எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்கள், சேவை மையங்களில் இதற்கான பணி தீவிரமாக நடைபெற்றது.

இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அந்த கால அவகாசமானது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா  மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரியத்துறை உத்தரவிட்டது.

மேலும் தமிழகத்தில் இன்று 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வும், நாளை பதினொன்னாம் வகுப்பு மாணவர்களுக்கும், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்வாரியம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பெயரில் மின்தடை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.