அரசு பேருந்தில் நடப்பதை போல ஆம்னி பஸ்களில் முன்பதிவு இல்லை! போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாளிற்கு வெளியூர்களில் பணிபுரிபவர்கள்,மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதினால் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கபடுவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருபதினால் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்ததால் ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து புறநகரங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 6,500 சிறப்பு பேருந்துகள் நான்கு நாட்கள் இயக்கப்படவுள்ளது.பொங்கல் பண்டிகை 15 தேதி வியாழன்,வெள்ளிக்கிழமைகளில் பயணம் செய்வார்கள்.அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து ஆறு சிறப்பு பேருந்து நிலையம் மூலம் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
சொந்த ஊர்செல்ல இருப்பவர்கள் அரசு பேருந்தில் ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர். அரசு பேருந்துகளில் முன்பதிவு நடப்பதை போல ஆம்னி பேருந்துகளில் நடக்கவில்லை.13 ஆம் தேதிக்கு மட்டும் 70 சதவீதம் ஆம்னி பேருந்துகள் நிரம்பி இருப்பதாக மற்ற நாட்களில் அதிக இடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.