Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி!!

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சமூக நீதி பேசும் படமாக திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்ததால் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் படத்திற்கு ஆதரவளித்தனர்.

 

மாமன்னன்,திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து கடந்த ஜூலை 27 அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.அந்த வகையில் நெட்பிளிக்ஸில் வெளியான நாளிலிருந்தே அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர் காட்டும் சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து தான் படமாக்கபட்டிருக்கும். இதிலும் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மற்ற படங்களை போலவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளங்களை வில்லன் கதாபாத்திரத்தில் காட்டியிருப்பார்.

 

இப்படத்தில் மாமன்னன் கேரக்டரில் வடிவேல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருப்பார். படத்தில் வில்லனாக ரத்தினவேல் கதாபாத்திரத்தில் நடிகர் பகத் பாசில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.இதனை நடிப்பு என்று சொல்வதை விட ரத்தினவேலாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். மொத்த படத்தையும் தனது ரத்தினவேல் கதாபாத்திரத்தால் அவர் தாங்கியுள்ளார் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

பொதுவாக திரைப்படங்களில் ஹீரோ கதாபாத்திரம் ரசிக்கப்படுமென்றால் வில்லன் கதாபாத்திரம் வெறுக்கப்படும் வகையில் தான் இருக்கும்.ஆனால் இந்த படத்தில் அது பொருந்தவில்லை என்றே சொல்லலாம்.படத்தின் வில்லனாக வரும் ரத்தினவேல் கேரக்டரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை போல காட்டியிருந்தாலும் பகத் பாசிலின் அற்புதமான நடிப்பால் அது ஒரு மாஸ் ஹீரோ போன்ற தோற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டது.

 

அதே நேரத்தில் வில்லன் கதாபத்திரமாக ஒரு சமூகத்தை காட்சிப்படுத்தியதால் அந்த சமுதாய மக்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு சமுதாய மக்களும் தங்களின் சாதி அடையாளத்துடன் கூடிய பாடல்களுடன் இவர் வரும் காட்சிகளை இணைத்து கொண்டாடி மகிழ்கின்றனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.

 

அந்த வகையில் நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் பகத் பாசில் ஏற்று நடித்த ரத்தினவேல் கதாபாத்திரத்தை ஹீரோவாக சித்தரித்து மீம்ஸ், மற்றும் தமிழ் படங்களின் மாஸ் பாடல்களை இணைத்து வீடியோ எடிட் செய்து

இணையத்தை ஆட்டிப்படைத்து வருகின்றனர்.இப்படத்தை பார்க்காதவர்கள் எடிட் செய்த வீடியோக்களை பார்த்தால் பகத் பாசில் தான் ஹீரோவாக இருப்பார் என்று நினைக்கும் அளவிற்கு ஒவ்வொரு காட்சியும் அந்தந்த சமுதாய பாடல்களுக்கு பொருந்தும் வகையில் அமைந்திருக்கும்.

 

இதனதொடர்ந்து தமிழ் ரசிகர்களின் ஆதரவை எற்றுக்கொள்ளும் வகையில் பகத் பாசில் அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தின் வால் பேப்பராக l ரத்தினவேல் கதாபாத்திரத்தின் போட்டோவை வைத்திருந்தார்.இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாரி செல்வராஜ் எதிர்ப்பாளர்கள் அவருடைய பக்கத்தில் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் மாரி செல்வராஜ்க்கு எதிராக தொடர்ந்து கமெண்ட் செய்து வருவதால் அவர் படத்தில் நடித்த நடிகர் என்ற அடிப்படையில் தான் வைத்த முகநூல் கவர் போட்டோவை அவரே நீக்கியுள்ளார்.

 

இந்நிலையில் ரத்தினவேல் மனைவியாக வரும் ஜோதி கதாபாத்திரத்தையும் இந்த நெட்டிசன்கள் விட்டு வைக்காமல் அவரையும் தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர்.ரத்தினவேல் மனைவியாக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் ரவீனா ரவி நடித்துள்ளார்.இவர் ஒரு டப்பிங் கலைஞர் மற்றும் நடிகையும் ஆவர்.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழிகளில் தொலைக்காட்சி விளம்பரங்களை டப்பிங் செய்துள்ளார்.மேலும் பல முன்னணி ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.

 

இந்நிலையில் மாமன்னன் படத்தில் ரத்தினவேல் மனைவியாக வரும் இவருக்கு பெரிதாக காட்சிகளோ வசனங்களோ இல்லையென்றாலும் தன்னுடைய முக பாவனைலேயே தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இது ரசிகர்களை கவர்ந்திருக்கிறதோ இல்லையோ இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை வெறுப்பேற்றும் வகையில் இவரையும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

 

அந்த வகையில் இவருக்கு ஆதரவாகவும் மீம்ஸ் மற்றும் பாடல்களை பகிர்ந்து வருகின்றனர்.அதில் ரத்தினவேல் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் வகையில் தனது மனைவிக்கு முழு அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் கொடுத்திருப்பார். கடைசியாக தன் மனைவியை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியும் அழகு பார்த்தார் என மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இவரை கொண்டாடும் விதமாக மறுமலர்ச்சி படத்திலிருந்து ‘நன்றி சொல்ல உனக்கு’,வெற்றிவேல் படத்திலிருந்து ‘உன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல’ இது போன்ற பாடல்களை இணைத்து ரத்தினவேல் மனைவியாக நடித்த ஜோதி கதாபாத்திரத்தை வைரலாக்கி வருகின்றனர்.அதையும் தாண்டி ஒரு சிலர் தற்பொழுது “ரத்தினவேல் பொண்டாட்டி” என்ற

பெயரில் முகநூலில் குரூப் தொடங்கும் வேலையையும் ஆரம்பித்து விட்டனர்.

Exit mobile version