Pakistan: பாகிஸ்தான் எல்லையில் 15 ஆயிரம் தாலிபன்கள் குவிக்கப்பட்டு இருப்பதால் பதற்றம்.
ஆப்கானிஸ்தானில் தற்போது மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்க வில்லை. முதன் முதலாக தலிபான்களுக்கு ஆதரவு கொடுத்தது பாகிஸ்தான் அரசு. இந்த நிலையில் சமீப காலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்ள டிடிபி எனும் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பு பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் நோக்கமாக பாகிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைப்பது தான். பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல் படுவதால் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்புக்கு எதிரான தாக்குதலில் சீன மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு எதிர் தாக்குதல் நடத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் தெஹ்ரீக் ஐ தாலிபான் அமைப்பினர் முகாம்கள் மீது தாக்குதலை நடத்தி இருக்கிறது. இதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த பதிலடி தாக்குதல் நடத்துவோம் என அறிவித்து தலிபான் அரசு.
எனவே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் 15,000 படை வீரர்களை குவித்து வருகிறது தாலிபான் அரசு. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான் அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பாகிஸ்தான்மீது ஆப்கானிஸ் தான் அரசு போரை தொடங்கியது பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.