நிவாரணத்த தொகைகளில் பாரபட்சம் இருக்கக்கூடாது! முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!
தமிழகத்தில் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்ஙள் பாரபட்சம் பார்க்க கூடாது என்று அதிமுக தலைவர் ஒ.பன்னீர் செல்வம் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடக்கும் விபத்துகளுக்கு அரசால் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகையானது விபத்துக்களை பொருத்து மாறுபடுகின்றது. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு தொகையும், மின்சாரம் தாக்கி உயிரிவந்தவர்களுக்கு ஒரு தொகையும் என்று விபத்துக்குகளுக்கு தகுந்து இந்த நிவாரண தொகை மாறுபடுகின்றது. இது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் “எதிர்பாராதவிதமாக உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையில் தமிழக அரசு பாரபட்சம் காட்டக்கூடாது. சாலை விபத்துகள், வெடி விபத்துகள், யானை தாக்கி உயிரிழப்பவர்கள், மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்கள் என அனவைருக்கும் வேறு வேறு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழக அரசு நிவாரணத் தொகை அறிவித்தும் சில குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை கிடைப்பது இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.