Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூடுதலாக 3 ரூபாய் அதிகமாக வசூல் செய்வதாக எழுந்த புகார்!!! விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம்!!!

#image_title

கூடுதலாக 3 ரூபாய் அதிகமாக வசூல் செய்வதாக எழுந்த புகார்!!! விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம்!!!

ஸ்விக்கி ஊழியர்கள் டெலிவரி செய்யப்படும் உணவு ஆர்டர்களுக்கு கூடுதலாக 3 ரூபாய் வசூல் செய்வதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் எழுந்த நிலையில் அதற்கு ஸ்விக்கி நிறுவனம் பதில் அளித்துள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆன்லைன் மூலமாக உணவு வாங்கி சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகமாகிவிட்டது. இதனால் ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களும் அதிகமாகி விட்டது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்வதற்கு ஒவ்வொரு நிறுவறமும் ஒரு செயலியை வைத்துள்ளது. இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை ஆர்டர் செய்து கொள்ளலும். இதில் கேஷ் ஆன் டெலிவரி என்று கூறப்படும் பொருள் வாங்கிவிட்டு பணத்தை கொடுக்கும் வசதியும் உள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம்.

ஆர்டர் செய்த பிறகு குறிப்பிட சில பணித் துளிகளில் ஆர்டர் டெலிவரி செய்யப்படும். இவ்வாறு தமிழகத்தில் மட்டுமில்ல. இந்தியாவில் பல உணவு டெலிவரி நிறுவனங்கள் உள்ளது. அவ்வாறு மக்களுக்கு ஆன்லைன் ஆர்டர் மூலமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஸ்விக்கியும் ஒன்று.

இந்த ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரிக்கு 3 ரூபாய் கூடுதலாக வசூல் செய்வதாக கிங்ஸ்லி என்ற வாடிக்கையாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். மேலும் இதே போல பல வாடிக்கையாளர்கள் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கிங்ஸ்லி கூறியதற்கு ஸ்விக்கி நிறுவனம் பதில் அளித்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம் “கூடுதலாக எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. அது ஒரு காட்சிப் பிழையாக இருக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட தகை தான் வசூல் செய்யப்படுகின்றது” என்று கூறியுள்ளது.

Exit mobile version