Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த 14 வகை மளிகை பொருட்கள் தான் உங்க வீட்டுக்கு வரப் போகுது!!

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த 7ஆம் தேதி கொரோனா நிவாரணம் வழங்கும் தொகுப்பில் இரண்டு கட்டங்களாக பிரித்து வழங்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தார். கடந்த மாதம் 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி அனைத்து மக்களுக்கும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது தவணையாக ரூ 2000 கொரோனா நிவாரண நிதியும் மற்றும் 14 வகை வகை பொருட்களும் அடங்கிய இலவச தொகுப்பு இன்றிலிருந்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் இரண்டாவது தவணையாக ரூ 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும். அதனால் மக்கள் எவ்வித பயமுமின்றி பொறுமையாக நிவாரண பொருட்களை சரியான வழியில் வாங்கிக் கொள்ளலாம். நிவாரண பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் ஏதாவது குளறுபடி நடந்தால் அதை விற்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ரேஷன் கடைகளில் அளிக்கப்பட உள்ள 14 வகை மளிகை பொருட்கள் என்னென்ன என்பதைப் பற்றிய முழு விவரம் உங்களுக்காக.

1. துணி துவைக்கும் சோப்பு -1
2. குளியல் சோப்பு 25 கிராம் 1
3. மிளகாய் தூள் 100 கிராம்
4. மஞ்சள் தூள் 100 கிராம்
5. சீரகம் 100 கிராம்
6. கடுகு 100 கிராம்
7. டீ தூள் 200 கிராம்
8. கடலை பருப்பு 250 கிராம்
9. புளி 250 கிராம்
10. உளுத்தம் பருப்பு 100 கிராம்
11. ரவை 1 கிலோ
12. உப்பு 1 கிலோ
13. கோதுமை 1 கிலோ
14. சர்க்கரை 500 கிராம்.

இவையெல்லாம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

Exit mobile version