பொதுவாக வங்கிகளின் மாத விடுமுறை நாட்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாக இருக்கிறது. காரணம், வெளியூரில் உள்ள மக்கள் சில பேர் தங்கள் சேவிங்ஸ் அக்கவுண்ட் ஓபன் செய்திருக்கும் வங்கிகளுக்குச் செல்வதற்காகவே தனியாக ஒரு நேரத்தை ஒதுக்கி தங்களுடைய ஊருகளுக்கு வருவர். ஆனால் அந்த நேரத்திற்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தால் அந்த நாள் அவர்களுக்கு வீணாகிவிடும்.
வரப்போகும் டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை ஆகியவையும் அடங்கும். டிசம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. வங்கி ஊழியர்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் 6 நாட்கள் விடுமுறைக்குப் பதிலாக 7 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. வங்கிகளுக்கு ஆர்பிஐ-இன் வழிகாட்டுதல்கள்படி தான் விடுமுறைகள் அளிக்கப்படும். ஆனால், அதிலும் இந்த 17 நாட்கள் தொடர்ந்து விடுமுறைகள் இருக்காது. மக்கள் ஒரு சில சேவைகளை இந்த விடுமுறை நாட்களில் பெறுவதற்கு இன்டர்நெட் பேங்கிங், மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தலாம்.
டிசம்பர் 1: ஞாயிறு விடுமுறை.
டிசம்பர் 3: செவ்வாய்க்கிழமை புனித ஃபிரான்சிஸ் சேவியர் விழா – பிராந்திய விடுமுறை.
டிசம்பர் 8: ஞாயிறு விடுமுறை.
டிசம்பர் 12: வியாழக்கிழமை பா – டோகன் நெங்மிஞ்சா சங்மா – ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை. டிசம்பர் 14: இரண்டாவது சனிக்கிழமை – பொதுவான விடுமுறை.
டிசம்பர் 15: ஞாயிறு விடுமுறை.
டிசம்பர் 18: புதன்கிழமை யு சோசோ தாமின் நினைவு தினம் – ஷில்லாங்கில் வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 19: வியாழக்கிழமை கோவா விடுதலை தினம் – கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 22: ஞாயிறு விடுமுறை.
டிசம்பர் 24 செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் ஈவ் – அப்போது ஐஸ்வால், கோஹிமாவில் வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 25: புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை – இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை. டிசம்பர் 26: வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் சில மாநிலங்களில் மட்டும் விடுமுறை.
டிசம்பர் 27: வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களால் சில மாநிலங்களில் மட்டும் விடுமுறை. டிசம்பர் 28: நான்காவது சனிக்கிழமை – பொதுவான விடுமுறை.
டிசம்பர் 29: ஞாயிறு விடுமுறை.
டிசம்பர் 30: திங்கட்கிழமை U Kiang Nangbah – ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
டிசம்பர் 31: செவ்வாய்க்கிழமை புத்தாண்டு ஈவு – சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை.