சளி காய்ச்சல் குணமாக வீட்டிலிருக்கும் இந்த 2 பொருள் போதும்!! இனி மருந்து மாத்திரை தேவையில்லை!!
அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து பல மாவட்டங்களில் வெயிலுக்கு பதிலாக மழை பெய்தபடியே உள்ளது. இதனால் வைரஸ் காய்ச்சல்கள் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நாமக்கல் கிருஷ்ணகிரி கோயம்புத்தூரில் உள்ள மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் ஆனது அதிகரித்து வருகிறது. உங்கள் உடலில் காய்ச்சல் மற்றும் சளிக்கான அறிகுறி ஏற்பட்ட உடனே இந்த ரெமடியை செய்து குடியுங்கள். இதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியை கட்டாயம் தவிர்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
புதினா இலை
கிராம்பு
தண்ணீர்
தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் அளவுக்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதனை அடுப்பில் வைத்து அதனுடன் சிறிதளவு புதினா இலைகளை சேர்க்க வேண்டும்.
புதினா இலை நன்றாக கொதித்து வரும் பட்சத்தில் இரண்டு லவங்கம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி சுவை கேட்ப தேன் அல்லது சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை தேநீர் போல குடித்து வர சளி மற்றும் காய்ச்சல் முற்றிலும் குணமாகும்.
மேலும் டீ காபி அருந்தாமல் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வரலாம்.
இவாறு செய்வதால் மஞ்சளானது கிருமி நாசினியாக பயன்படுகிறது. சளியை உருவாக்கும் தொற்றுக்களை அழிக்க உதவுகிறது.