அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
127

பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த ஒரு சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதோடு தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

அதோடு பருவ மழை தீவிரமடைவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மும்முரமாக களம் இறங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி சென்னை முழுவதும் வடிகால் வாய்கள் தூர்வாரப்பட்டு செயற்கை வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்குக் காரணம் கடந்த சில வருடங்களாக சென்னையில் பெய்த மழையும் அந்த மடையன் காரணமாக சென்னை சந்தித்த பல இக்கட்டான சூழ்நிலைகளும் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

கடந்த சில வருடங்களாக பெய்த கனமழையின் காரணமாக, சென்னை முழுவதும் வெள்ளைக்காடானது. பல குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்து சென்னை வாசிகள் படாத பாடுபட்டார்கள்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் தமிழக அரசு தற்போதே தன்னுடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் ஓரிரு மணி நேரத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.