தூசி ஒவ்வாமையில் இருந்து நிரந்தமாக மீள.. இந்த 4 ஹோம் ரெமிடிஸ் ஹெல்ப் பண்ணும்!!

0
55
These 4 Home Remedies Will Help You Permanently Get Rid Of Dust Allergy!!

காற்று மாசுபாடு,தூசி போன்றவற்றால் டஸ்ட் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுகிறது.இந்த பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணவும்.

வீட்டு வைத்தியம் 01:

1)கல் உப்பு
2)தண்ணீர்

பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த நீரை ஆவி பிடித்தல் டஸ்ட் அலர்ஜி முழுமையாக நீங்கிவிடும்.உப்பு நீர் வாய் கொப்பளித்தால் தொண்டையில் உள்ள தூசி,சளி உள்ளிட்டவை நீங்கிவிடும்.

வீட்டு வைத்தியம் 02:

1)இஞ்சி
2)தேன்

ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்து ஒரு கிளாஸ் நீரை அதில் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைக்க வேண்டும்.இஞ்சி தண்ணீர் கொதித்து வந்ததும் ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து பருகினால் டஸ்ட் அலர்ஜிக்கு நிவாரணம் கிடைக்கும்.

வீட்டு வைத்தியம் 03:

1)துளசி இலைகள்
2)மஞ்சள் தூள்

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும்.பிறகு அதில் 10 துளசி இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் தூசி ஒவ்வாமை சரியாகும்.

வீட்டு வைத்தியம் 04:

1)சோம்பு
2)சீரகம்

அடுப்பில் பாத்திரம் வைத்து 1/2 தேக்கரண்டி சோம்பு மற்றும் 1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் தூசி ஒவ்வாமைக்கு நிவாரணம் கிடைக்கும்.