மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏன் ஒவ்வொரு அசைவுக்கும் மூளைக்கும் எண்ணற்ற தொடர்புகள் உள்ளன.மனிதனைப் பொருத்த மட்டில் அவனது மூளை தான் கமென்டர்.மூளை சொல்லும் வேலையை தான் மனிதன் செய்கின்றான்.எனினும் மனிதனின் ஒரு சில செயல்கள் இந்த மூளையை சோம்பேறி ஆக்கி விடுகின்றன.
மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ஒருவன் எளிதில் வெற்றி அடைகின்றான்.ஆனால் மூளைக்கு சோம்பேறித்தனத்தை கொடுக்கும் ஒருவனுக்கு வெற்றி என்பது எட்டாத இலக்காகவே இருக்கிறது.
எனவே மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இந்த ஏழு விஷயங்களை மட்டும் செய்து விடக்கூடாது.
காலை உணவு சாப்பிடாமல் இருப்பது:
பொதுவாகவே வேலைக்கு செல்பவர்கள் நேரமின்மையால் காலை உணவை முறையாக எடுத்துக் கொள்வதில்லை. இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடையில் குறைந்தபட்சம் 9 மணிநேரம் இடைவெளி இருப்பதால் உடலில் ஒட்டுமொத்த எனர்ஜியும் அந்த நேரத்தில் கம்மியாக இருக்கும்.
இதனால் நம் மூளை சோர்வு நிலையிலேயே இருக்கும் நம் காலை உணவு முறையாக எடுத்துக்கொண்ட பின்பே மூளை சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.நாம் காலை உணவை தடுக்கும் போது அன்று நாள் முழுவதுமே மூளை சோர்வுடன் இருக்கும்.எனவே எக்காரணத்தை கொண்டும் காலை உணவை நேரத்தில் சாப்பிட்டு விட வேண்டும்.
தாமதமாக தூங்குவதால்:
தாமதமாக தூங்குவதால் நம் மூளை எளிதில் சோர்வடைந்து விடும் ஒரு மனிதனுக்கு உணவு என்பது எப்படி முக்கியமோ அதே போன்று சரியான தூக்கம் என்பது மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும்.சரியான கால இடைவெளியில் தூங்கவில்லை என்றால் மூளை எளிதில் சோர்வடைந்து விடும்.
காலையில் அதிக நேரம் தூங்குவது:
இரவில் நேரமாக படுத்து அதிகாலையில் எழுதுவதே சரியான முறையாகும்.அதிகாலையில் எழுவதால் நம் உடலிற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறுவதால் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.இதுவே இரவில் நேரம் கழித்து படுத்து காலையில் அதிக நேரம் தூங்குவதால் உடலுக்கு தேவையான எனர்ஜிகளும் கிடைக்கப்பெறாமல் போகும்.மூளையும் சோர்வாகவே இருக்கும்.
மின்னணு சாதனங்களை இரவில் அதிக நேரம் கண் விழித்துப் பார்ப்பது:
போன், டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை இரவில் அதிக நேரம் பார்ப்பதால் மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்படும். தூங்குவதற்கு இருட்டு ரொம்பவும் முக்கியமானதாகும் ஆனால் இது போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் வெளிச்சங்கள் நமது தூக்க நேரத்தை கெடுக்கும் இதனால் மனிதனின் உடல் தூங்கிவிடும் ஆனால் மூளை விழித்துக் கொண்டே இருக்கும்.இவ்வாறு அதிக நேரம் விழித்துக் கொண்டே இருப்பதால் மூளை காலையில் சோர்வடைந்து விடும்.
தூங்கும் போது தொப்பி அல்லது ஸ்கார்ஃப் போன்றவற்றை அணிந்திருப்பது:
நம் உடலுக்கு தூங்கும் போது தேவையான ஆக்சிஜன் வேண்டும் இதுபோன்று ஆக்சிஜன் செல்வதை தடுக்கும் வகையில் நாம் தூங்கினால் மூளை பெரிதும் சோர்வடையும்.
சிறுநீரை அடக்கிக்கொண்டு அதிக நேரம் இருப்பது :
சிறுநீரை அடக்கிக் கொண்டு வெகு நேரம் இருப்பதால் மூளை எளிதில் சோர்வடைந்து விடு