Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!!

#image_title

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 சாஸ்திர குறிப்புகள் இவை..!!

1)பெண்கள் ஒரு போதும் கடன் வாங்கக் கூடாது. எதிர்பாராத செலவிற்கு கடன் வாங்கும் சூழல் ஏற்படுகிறது என்றால் செவ்வாய் கிழமை நாளில் கடன் வாங்கவே கூடாது. ஆனால் செவ்வாய் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க உகந்த நாளாக இருக்கிறது.

2)பெண்கள் தாங்கள் சாப்பிட பயன்படுத்தும் வட்டுகள் பழுதாகி உடைந்தோ, நெளிந்தோ இருக்கக் கூடாது. இவ்வாறு இருந்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும்.

3)[பெண்கள் தாங்கள் சமைக்கும் உணவில் உப்பை அதிகமாகவும் சேர்க்கக் கூடாது. அதேபோல் குறைவாகவும் சேர்க்கக் கூடாது. அளவான உப்பு சேர்த்து சமைத்து பரிமாற வேண்டும். வீட்டில் இருக்கும் நபர்கள் உணவு உண்பதற்கு முன் கால்களை குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து அந்த ஈரம் காய்வதற்குள் உணவு அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். இவ்வாறு ஈரக் காலோடு உணவு அருந்தும் பொழுது ஜீரண சக்தி மேம்படும்.

4)பெண்கள் வீட்டு பூஜை அறையில் குத்துவிளக்கில் விளக்கேற்றுவதை தினமும் செய்து வருவதன் மூலம் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

5)வீட்டில் தேன் கூடு காட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் ஓட்டடை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் இருளடைந்து விடும்.

6)வீட்டிற்கு பின்னால் மரங்களை வளர்ப்பதால் கண் திருஷ்டி நீங்கும். செல்வம் அதிகரிக்கும். அதேபோல் வீட்டில் ஆரஞ்சு பழம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். ஆரஞ்சு பழம் மஹா லட்சுமிக்கு உகந்தவை ஆகும். இதனால் வீட்டில் செல்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

7)வீட்டில் தீபம் ஏற்றி வைத்தால் அதனை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. மரண சடங்கு செய்பவர்கள் வீட்டில் தான் விளக்கை வாயால் ஊதி அணைப்பார்கள்.

8)கோயிலில் தரக் கூடிய எலுமிச்சை பழத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கண்ட இடத்தில் போடக் கூடாது. பூஜை அறையில் வைக்கலாம். ஜூஸ் செய்து கூட பருகலாம். நாம் கண்ட இடத்தில் போட்டு பழம் அழுகி பூச்சி, புழுக்கள் வைத்து விட்டால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் வந்து விடும்.

9)குளிக்கும் பொழுது பல் துலக்கக் கூடாது. பல் துலக்கி விட்டு பின்னர் குளிக்கச் செல்லலாம். இவ்வாறு குளிக்கும் போது பல் துலக்கினால் முன்னோர்களின் சாபம் தங்களை தொற்றி விடும்.

10)கோயிலில் தீபம் ஏற்றும் பொழுது மற்றவர்களுடைய விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதிலிருந்து நம் விளக்கை எரிய வைக்கக் கூடாது. ஆலைய தீபத்தில் இருந்து வேண்டுமென்றால் விளக்கேற்றி கொள்ளலாம்.

Exit mobile version