இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்!

0
165
These are all mangoes soaked in soap powder! If so, do not buy!

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்!

இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் மாம்பழத்தில் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது மட்டுமின்றி தர்பூசணி வெள்ளரி போன்ற சீசனில் அதிகரிக்கும் பல வகைகளில் ரசாயன பொருட்கள் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். நாம் உண்ணும் பாதி உணவில் ரசாயனம் கெமிக்கல்களை சேர்த்து மக்கள் பார்வைக்கு பளபளவென காட்டி விற்பனை செய்து வருவது வழக்கமாக வைத்துள்ளனர். உணவுத்துறை அதிகாரிகள் இதனை கண்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் உணவுத்துறை அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் விழிப்புணர்வு செய்தோம் வருகின்றனர்.

பணத்தின் மேல் உள்ள தோலை ஒரு சாதாரண பேப்பரைக் கொண்டு செய்து பார்த்தாலே அதன் வண்ணம் தனியாக வந்துவிடும். ஆன பொருட்களை வாங்கி உட்கொள்வதை தவிர்த்தல் என தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர். குறிப்பாக இது மாம்பழம் சீசன் என்பதால் ஆங்காங்கே பல கலப்படம் நடைபெற்று வருகிறது. காயாக இருக்கும் பொழுதே அதை பறித்து கல்லை கொண்டு பழுக்க வைப்பது மேலும் அதன் வண்ணம் மக்களின் கவரும் வகையில் இருப்பதற்கு இரசாயனப் பொருள்கள் தெளிப்பது என்று தொடர்ந்து நடந்து வருகிறது.

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் ஓர் அதிர்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. நாகை மாவட்டம் செஞ்சி என்ற கிராமத்தில் மாம்பழத்தை தோட்டத்திலிருந்து பறித்து வருகின்றனர். மாம்பழத்தின் மேல் உள்ள கரும்புள்ளியை நீக்க அந்த மாம்பழங்களை அனைத்தையும் டிடர்ஜென்ட் யில் ஊற வைக்கின்றனர். நாம் அன்றாடம் துணிதுவைக்கும் டிடர்ஜென்ட் பவுடரில் ஊறவைத்து அதன் மேலுள்ள கரும்புள்ளியை நீக்குகின்றனர்.

பின்பு அதனை நேரடி விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனை அறியாத மக்கள் பலம் நன்றாக உள்ளது என்று பார்த்த உடனே வாங்கி செல்கின்றனர். டிடர்ஜென்ட் இன் ஊற வைத்த பழத்தை சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். உபாதைகள் ஏற்படும். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. உணவுத்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும் அம்மக்கள் கூறிவருகின்றனர்.