Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர்களுக்கு இப்படித்தான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்!

These are the accounts for them! Announced Facebook! This is the reason!

These are the accounts for them! Announced Facebook! This is the reason!

இவர்களுக்கு இப்படிதான் கணக்குகள்! அறிவித்த பேஸ்புக்! இதுதான் காரணமாம்!

ஆப்கானிஸ்தானில் தற்போது ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது. அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல் படுத்துவார்கள் என்பதன் காரணமாக பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள். தப்பிச் செல்லாமல் வீட்டிலேயேயும் சிலர் இருக்கின்றனர். அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தொடர்ந்து தலிபான்கள் குறித்த செய்திகள் பலவகையில் கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் அனைத்து ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வரும் நிலையில், தற்போது அந்த அமைப்பின் பேஸ்புக் கணக்குகள் முடக்கம் செய்துள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது. மேலும் தலிபான் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், எங்கள் நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகளின் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன் காரணமாக அந்த அமைப்பை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை தடை செய்து வருகிறோம் என அதிரடியாக தெரிவித்து உள்ளது. இந்நிலையில் தலிபான் மற்றும் அவர்களுக்கு ஆதரவான வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்படும் என வாட்ஸ் அப் குழுமமும் அறிவித்துள்ளது குறிப்பிடப் தக்கது.

இதன் மூலமாக கலவரமான சூழ்நிலையை குறைக்கலாம் எனவும், பதட்டத்தை தவிர்க்கலாம் எனவும்  அந்த நிறுவனங்கள் நினைகின்றன போல. ஆனாலும் அங்கு உள்ள மக்கள் பெருமளவு அச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடப் தக்கது. சீக்கிரம் இந்த நிலைமை சரியாக வேண்டும் என அனைவரும் பிரார்திப்போம்.

ஆண்கள், பெண்கள் உட்பட அனைவருக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூட யோசிக்க ஆரம்பித்து உள்ளனர். இதையெல்லாம் சர்வதேச ஊடகங்கள் பல வெளியிட்டு வருவதும் உலக மக்களை பல வகைகளில் யோசிக்க வைக்கிறது.

Exit mobile version