Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதெல்லாம் நான் பண்ண வேண்டிய படங்கள் தான் : உண்மையை உடைக்கும் நடிகர் சக்தி

#image_title

இதெல்லாம் நான் பண்ண வேண்டிய படங்கள் தான் : உண்மையை உடைக்கும் நடிகர் சக்தி

1991ஆம் ஆண்டு சின்னத்தம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்து தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து, “நடிகன்” என்ற திரைப்படத்தில் சிறுவயது சத்தியராஜாகவும் நடித்தார்.

பிறகு, 2007ம் ஆண்டு தனது தந்தை பி.வாசு அவர்களின் இயக்கத்தில் “தொட்டால் பூ மலரும்” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் சில படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான “நினைத்தாலே இனிக்கும்” படம் இவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்றார்.

நடிகர் சக்தி அவர்கள் தற்போது பட வாய்ப்பு இன்றி வீட்டில் உள்ளார். இந்நிலையில், நடிகர் சக்தி ஒரு யூடியூப் சேனல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் தவறவிட்ட படங்கள் குறித்து பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த சினிமா நடிகர்கள் இந்த படங்களில் இவர் நடித்தால் நிச்சயம் நல்ல பெயரை பெற்றியிருக்கலாமே இவர்?.. இப்படி தவறவிட்டாரே!.. என்று தற்போது வேதனை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விமல் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த படமான களவாணி, நடிகர் நரேன் நடிப்பில் வெளியான நெஞ்சிருக்கும் வரை, தம்பிக்கோட்டை ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை தான் தவறவிட்டதாக பேட்டி ஒன்றில் நடிகர் சக்தி வேதனைப்படக் கூறினார்.

சினிமா துறையை பொருத்தவரை வாய்ப்பும் அதிர்ஷ்ட காத்தும், ஒருமுறை தான் வீசும் என்றும், வீசும் போது அதனை நாம் தான் பிடித்துக் கொள்ள வேண்டும் என்றும் மூத்த சினிமா கலைஞர்கள் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version