சர்க்கரை நோயை கரைக்கும் உணவுகள் இவை..!

0
193
#image_title

சர்க்கரை நோயை கரைக்கும் உணவுகள் இவை..!

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் இந்த நோய் உருவாகிறது. இந்த நோயால் கண் பார்வை குறைபாடு, சிறுநீரக பிரச்சனை, நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படும்.

உடலில் இன்சுலின் அளவு குறைந்தால் இந்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அனைவரும் சர்க்கரை டெஸ்ட் எடுத்துக் கொள்வது நல்லது.

கை, கால் ,மறுத்து போதல், முடி கொட்டல், உடல் எடை குறைவு உள்ளிட்டவை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

சர்க்கரை நோயை குணமாக்க இயற்கை வழிகள்..

தேவையான பொருட்கள்…

*பச்சைப்பயறு
*பச்சரிசி
*உப்பு

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 கப் பச்சை பயறு மற்றும் பச்சரிசி 1 கப் போட்டு தண்ணீர் ஊற்றி 3 முதல் 4 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு ஒரு மிக்ஸியில் இதை போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்,

ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பில் தோசைக் கல் வைத்து.. கல் சூடானதும் அரைத்த மாவை தோசையாக வார்த்துக் கொள்ளவும். இந்த பச்சை பயறு தோசை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும். அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்,

தேவையான பொருட்கள்…

*மாவிலை
*முருங்கை இலை
*கொய்யா இலை

செய்முறை…

இந்த மூன்று இலைகளையும் சம அளவு எடுத்து உலர்த்திக் கொள்ளவும்.

பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்யவும்.

1 கிளாஸ் அளவுள்ள நீரில் 2 ஸ்பூன் அளவு தயாரித்த பொடி சேர்த்து காய்ச்சி குடிக்கவும். இதை காலை நேரத்தில் குடிப்பது நல்லது. இவ்வாறு செய்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

தேவையான பொருட்கள்…

*மஞ்சள் பூசணி
*தேங்காய் துருவல்
*எலுமிச்சை சாறு

செய்முறை…

ஒரு துண்டு மஞ்சள் பூசணி.. விதை நீக்கி காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.

பிறகு அதில் 1/2 கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கலந்து விடவும். பிறகு அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவும். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.