Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

#image_title

வீட்டில் தடையின்றி பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம் இவை!

பரிகாரம் 01:

எப்போதும் பணத்தைக் கொடுக்கும் போதும் வாங்கும் போதும் “அரி ஹதோ” என்று சொல்லுங்கள்.
ஜப்பானிய மொழியில் இதற்கு “நன்றி” என்று அர்த்தம்.

இந்த பணத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி கூறுகிறோம் என்பது மறைமுகப் பொருள். அதுமட்டும் இல்லாமல் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி “ஷ்ரீம் ப்ரிஸீ” என்று 21 முறை பொறுமையாக சொல்லவும்.

தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வர பணம் சேர ஆரம்பிக்கும். இவை பார்க்க சிறிய பரிகாரமாக தெரிந்தாலும் இதனால் கிடைக்கக் கூடிய பலன் அதிகம்.

பரிகாரம் 02:

வீட்டில் பணம் நிறைந்து இருக்க சமையல் அறையில் உப்பு ஜாடியை உங்கள் அடுப்பின் வலது பக்கத்தில் இருக்குமாறு வையுங்கள். உப்பு ஜாடியும் எண்ணெய் ஜாடியும் பக்கத்தில் பக்கத்தில் வைக்காதீர்கள். வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் உப்பு ஜாடியைத் தவறாமல் நிரப்பி வையுங்கள்.

நாம் அன்ன பூரனிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தினமும் குனிந்து அரசி எடுக்கும் வகையில் அரிசி பாத்திரத்தை கீழ் ஷெல்பில் வைக்கவும். இப்படி செய்து பாருங்கள். 2 மாதங்களில் பண வரவில் முன்னேற்றம் இருக்கும்

Exit mobile version