இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

0
144
These are the signs! Scary new type of Corona!

இவைதான் அறிகுறிகள்! மிரட்டும் புதிய வகை கொரோனா!

சீனாவில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரனாவினால் பொது மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.சீனாவில் மீண்டும் கொரோனா அதி வேகமாக எழுச்சி பெற்றுள்ளது.ஒமிக்ரானின் துணை வைரஸான பி.எப்.7 என கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் மிக வேகமாக பரவும் திறன் கொண்டுள்ளது. இதனால் அமெரிக்கா,பெல்ஜியம், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், மற்றும் ஜப்பானிலும் மிக வேகமாக பரவியுள்ளது.

இந்தியாவில் குஜராத்தில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 2 பேர் பாதிக்கப்பட்டதாக உயிரி தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.ஒடிசாவிலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 4 பேருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய அரசு முன்னதாகவே மாநில அரசுகளுக்கு செய்ய வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. இன்று பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நோயின் அறிகுறிகளை நிபுணர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.மற்ற வைரஸ் பாதிப்புகளை போலவே இதற்கும் காய்ச்சல், இருமல் சோர்வு ஆகியன ஏற்படும்.சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

தடுப்பூசியால் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிலிருந்து 10 முதல் 18 நபர்கள் வரை  பரவும் தன்மை கொண்டது.இந்த பி.எப்.7 என்ற துணை வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும் தன்மை கொண்டது. தடுப்பூசி செலுத்தாமல் உள்ளவர்களுக்கு எளிதில் பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.

இணை நோய் உள்ளவர்கள் மூத்த குடிமக்கள் கூட்ட நெரிசலில் கட்டாயம் முக கவசம் அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்தியாவிலும் பரவிவிட்ட நிலையில் விமான நிலையங்களில் சர்வதேச பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.சீனாவில் 60 சதவீதம்  மக்கள் பாதிக்கப்பட்டு இலட்சகணக்கான மக்கள் உயிரிழக்க கூடும் என நிபுணர்கள் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.