Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!

#image_title

உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போவதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!

நல்ல நேரம் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியம். ஒருவருக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விட்டால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இந்த நல்ல நேரம் தங்களுக்கு ஆரம்பம் ஆகப் போகிறது என்பதை உணர்ந்தும் சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டில் காரணம் இன்றி கருப்பு எறும்பு கூட்டம் தென்பட்டால் தங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம். பண வரவு அதிகரிக்கும் என்று அர்த்தம். கருப்பு எறும்பு கூட்டத்தை வரவழைக்க சர்க்கரை கலந்த மாவை வீட்டில் தூவி விடலாம்.

வெளியில் செல்லும் பொழுது புதிதாக திருமணமானவர்களை பார்த்தால் தங்களுக்கு நல்ல காலம் ஆர்ப்பமாகப் போகிறது என்று அர்த்தம்.

உங்கள் வீட்டில் பறவைகள் கூடு கட்டினால் நல்லது நடக்கப் போகிறது என்று அர்த்தம்.

வீட்டு சமையலறை அல்லது பூஜை அறையில் பல்லிகளை கண்டால் நல்ல நேரம் ஆர்ப்பமாகப் போகிறது என்பதற்கான அறிகுறி ஆகும்.

வலது கையில் அரிப்பு ஏற்ப்பட்டால் பண வரவு அதிகரிக்கும் என்று அர்த்தம்.

ரோஜா, பாம்பு, பல்லி, துடைப்பம், மாங்காய், நட்சத்திரம் போன்ற பொருட்கள் கனவில் வந்தால் பண வரவு, செல்வம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.

காலை நேரத்தில் சங்கு சத்தத்தை கேட்டால் பண வரவு அதிகரிக்கும்.. நல்ல நடக்க போகிறது என்பதை குறிக்கும்.

மயில் நடனத்தை பார்த்தால் நல்லது நல்ல நேரம் ஆரம்பமாகும் என்று அர்த்தம்.

நீங்கள் செல்லும் வழியில் நாய் அசைவ உணவை வாயில் கவ்விச் செல்வதை பார்த்தால் நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது என்று அர்த்தம்.

உங்கள் வீட்டு வாசலில் யானை தும்பிக்கையை நீட்டியபடி நின்றால் தங்களுக்கு நல்ல நேரமாகப் போகிறது என்று அர்த்தம்.

Exit mobile version