நீங்கள் மறுபிறவி எடுத்துள்ளீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவை!! யாருக்கெல்லாம் மறுபிறவி கிடையாது தெரியுமா?

0
298
These are the signs that you are reincarnated!! You know who doesn't reincarnate?

இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்ற ஒன்று நிச்சயம் நிகழ்ந்தே தீரும்.ஆனால் மரணமடைந்த பின்னர் ஒரு மனிதனின் வாழ்க்கை முடிந்து விடுமா? என்றால் இல்லை என்பது தான் கருட புராணத்தில் பதிலாக இருக்கின்றது.பூமியில் அனைத்தையும் அனுபவித்த உயிர்களுக்கு மரணத்திற்கு பிறகு மறுபிறவி ஏற்படுவதில்லை என்கிறது புராணம்.

ஆசைகள் அனைத்தையும் துறந்து பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.தங்கள் வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி என்ற ஒன்று கிடையாது.அதேபோல் தாங்கள் செய்யும் பாவ மற்றும் புண்ணிய கணக்குகளை கழித்தவர்களுக்கும்,கர்மவினை,சாபம் இல்லாதவர்களுக்கு மறுபிறவி கிடையாது.சுயநலமாக வாழாமல் பிறருக்காக வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது.இறைவனுக்கு உண்மையான தொண்டு செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது.

ஆனால் சில கர்ம வினைகள்,செய்த பாவச் செயல்களுக்கான புண்ணிய கணக்கை கழிக்காமல் மரணித்தவர்களுக்கு மறுபிறவி ஏற்படும்.இந்த உலகில் எப்பொழுது பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.அதேபோல் தான் ஒரு உயிர் இறந்த பின்னர் எத்தனை முறை மறுபிறவி எடுக்கும் என்பதையும் யாராலும் கணிக்க முடியாது.

ஆனால் சில அறிகுறிகளை வைத்து நீங்கள் முன்பே பிறந்ததை அறிந்து கொள்ள முடியும்.நீங்கள் பல பிறவிகளை கடந்து வந்திருப்பவர் என்றால் நீங்கள் நிறைய முன்ஜெம நினைவுகளை பெற்றிருப்பீர்கள்.

உங்களுடைய உள்ளுணர்வை வைத்து நீங்கள் முன்பே பிறந்ததை அறிந்து கொள்ள முடியும்.கடந்த பிறவியில் தங்களுக்கு கிடைத்த அறிவின் அனுபவத்தில் இருந்து இந்த உள்ளுணர்வு ஏற்படக் கூடும்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மீண்டும் மீண்டும் உங்கள் கனவில் காண்கிறீர்கள் என்றால் நீங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.நீங்கள் உங்கள் மறுபிறவியில் மீதமுள்ள கர்ம வினைகள்,பாவங்களை கழிப்பதன் மூலம் உங்களுக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படாது.