தினசரி வாழ்வில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வேண்டிய ஆன்மீக குறிப்புகள் இவை!!

0
78
These are the spiritual tips that women should follow in their daily life!!

இந்து மக்கள் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டிருக்கின்றனர்.இந்த ஆன்மீகத்தில் பெண்கள் மற்றும் ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றது.அந்தவகையில் ஆன்மீகத்தில் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1)தினமும் வாசல் கூட்டிய பிறகு சாணத்தில் மஞ்சள் கலந்து தெளிக்க வேண்டும்.

2)பெண்கள் கோலமிடும் போது தெற்கு திசையை பார்த்தவாறு நின்றுகொண்டு கோலமிடக்கூடாது.

3)கர்ப்பிணி பெண்கள் காளி போன்ற உக்கிர தெய்வம் இருக்கும் கோயிலுக்கு செல்லக் கூடாது.

4)திருமணமான பெண்கள் ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.சிலர் மூன்று விரல்களில் மெட்டி அணிவார்கள்.இது கணவரின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

5)கோயிலில் வழங்கப்படும் துளசியை தலையில் வைக்கக் கூடாது.

6)பெண்கள் எப்பொழுதும் நறுமணமான பூக்களை தலையில் அணிய வேண்டும்.

7)தினமும் குளிக்கும் முகத்திற்கு மஞ்சள் பூச வேண்டும்.இதனால் பெண்களின் முகம் மகாலட்சுமி அம்சத்தோடு இருக்கும்.

8)மாதவிடாய் காலத்தில் பெண்ககள் கோயிலுக்கு செல்லக் கூடாது.பூஜை பொருட்களை தொடக் கூடாது.

9)திருமணமான பெண்கள் வீட்டில் தலைவிரி கோலத்தில் எப்பொழுதும் இருக்கக் கூடாது.

10)திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்காமல் இருக்கக் கூடாது.வெள்ளி மற்றும் செவ்வாய் தினங்களில் தலைக்கு குளிக்க வேண்டும்.