பெண்கள் தங்களின் கர்ப்ப காலத்திற்கு முன்பே குழந்தை பெற்றெடுத்தால் தாய் மற்றும் சேய்க்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.ஆனால் சில கர்ப்பிணிகளின் கருவிலேயே சிசு குறைபாடு ஏற்படுகிறது.அதாவது குழந்தையின் உடலில் ஏதேனும் குறைபாடு ஏற்படலாம்.
கருவில் வளரும் குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு இருந்தால் அதை மருத்துவர்களால் தடுக்க இயலாது.இன்றைய காலகட்டத்தில் சுமார் 4% குழந்தைகள் ஏதேனும் ஒரு பிறவி குறைபாட்டால் பிறக்கின்றனர்.
சிலவகை பிறப்பு குறைபாடு உயிருக்கே ஆபத்தாக வாய்ப்பிருக்கிறது.பிறவி மற்றும் பிறப்பு குறைபாடு காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனதளவில் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
பிறப்பு குறைபாடு
இதயம் சம்மந்தப்பட்ட குறைபாடு
உதடு பிளவு
எலும்பு வளர்ச்சி குறைவு
மூளை வளர்ச்சி குறைவு
இதுபோன்ற பிறப்பு குறைபாடுகள் பெரும்பாலும் மரபணு மாற்றத்தால் தான் ஏற்படுகிறது.அதேபோல் சுற்றுச்சூழல் காரணிகளால் இந்த பிறப்பு குறைபாடு ஏற்படுகிறது.தாய்க்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் குழந்தை பிறப்பு குறைபாடு ஏற்படும்.
எனவே இதுபோன்ற பிறப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் சில விஷயங்களை தவிர்க்க மற்றும் கடைபிடிக்க வேண்டும்.
1)போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறப்பு குறைபாட்டை தடுக்கும் ஆற்றல் போலிக் அமிலத்திற்கு உள்ளது.இந்த போலிக் அமிலம் அடர் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகளில் இருக்கிறது.
2)கர்ப்பிணி பெண்களின் உடலில் அயோடின் குறைபாடு ஏற்பட்டால் பிறப்பு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே பெண்கள் தங்கள் உணவில் அயோடின் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3)தங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் நீங்கள் உட்கொள்ளும் சிலவகை மருந்துகள் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.எனவே நீங்கள் எந்த மருந்தை உட்கொள்வதாக இருந்தாலும் ஒருமுறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.
4)கர்ப்ப காலத்தில் பெண்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.ஆரோக்கியம் இல்லாத உணவுகளை தவிர்க்க வேண்டும்.கர்ப்ப காலத்தில் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அது நஞ்சுக்கொடிக்கு ஆபத்தை உண்டு பண்ணலாம்.ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது,உடல் பருமன் போன்ற பல காரணங்களால் பிறவி குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.