கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

0
76
#image_title

கிட்னியை பாதுகாப்பதில் இந்த உணவுகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

சில பழக்கங்கள் நமது சிறு நீரகத்தினை பாதித்து விடுகின்றன. சிறு நீரகம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ரத்தத்தினை வடி கட்டி சுத்தம் செய்கின்றது. ஹார்மோன்களை கொடுக்கின்றது. இந்த ஹார்மோன்கள் சத்துக்களை அளிக்கின்றது. தாது உப்புக்களை உணவிலிருந்து எடுத்துக்கொள்கின்றது. ஒரு திரவ உற்பத்தி மூலம் நச்சுக்களை உடலிலிருந்து நீக்குகின்றது. சிறு நீரக செயல்பாட்டு குறைவோ (அ) பாதிப்போ உடனடி வெளிப்படையாகத் தெரியாது. ஆய்வுகள் கூறுவது சிறுநீரகங்கள் 20 சதவீத செயல்பாட்டு திறனில் கூட வேலை செய்யும். ஆனால் சிறுநீரக பாதிப்பு என்பது உடலில் அநேக பாதிப்புகளை ஏற்பத்தும் என்பதால் உடனடி கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரக பாதிப்பினை பாதிக்கும் சில பழக்கங்கள்

கிட்னியை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 உணவுகள்:-

*தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு அதிகம் உள்ளது.இதில் வைட்டமின் சி,பி6 மற்றும் மாங்கனீசு அதிகளவில் இருக்கிறது.இவை சிறுநீரகத்திற்கு அதிகளவு நன்மை பயக்கிறது.குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிறுநீரக பாதை நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது.

*அதிக வீரியம் மிக்க சிட்ரிக் அமிலத்தை கொண்ட பழம் எலுமிச்சை.இதில் அதிகளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.இவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.இந்த பழத்தை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.குறிப்பாக காலை நேர உணவில் எலுமிச்சம் பழத்தை உணவாக எடுத்து கொண்டால் சிறுநீரகம் அதிக பலம் பெறும்.

*நமது உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க புரதம் அவசியமான ஒன்றாகிறது.இந்த புரதம் முட்டையில் தான் அதிகளவில் இருக்கிறது.தினமும் ஒரு வேக வாய்த்த முட்டையை உண்டு வருவதன் மூலம் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

*சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இவற்றில் வைட்டமின் ஏ,சி மற்றும் கே,உயிர்ச்சத்துக்கள்,தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்டுகள் நிறைந்து இருக்கிறது.

*கொத்தமல்லியில் உள்ள மாங்கனீசு,இரும்புச்சத்து,வைட்டமின் சி,கே,புரதம்,மெக்னீசியம் நிறைந்து இருக்கிறது.இந்த கொத்தமல்லி இலைகள் சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதேபோல் பதப்படுத்தப்பட்ட இறைச்சி,பர்கர்,சோடா ஆகியவற்றை உணவாக எடுத்து கொள்ளும் சிறுநீரகம் ஆரோக்கியத்தை இழக்கும்.சிகரெட்,மது பழக்கத்தை முழுமையாக தவிர்ப்பது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லது.